மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே பாட்டியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு + "||" + The young man who killed the grandmother is sentenced to life imprisonment

வள்ளியூர் அருகே பாட்டியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

வள்ளியூர் அருகே பாட்டியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
வள்ளியூர் அருகே பாட்டியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,

வள்ளியூர் அருகே பாட்டியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

பாட்டியை கொன்ற வாலிபர்


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூர் பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் ஜெயக்குமார்(வயது 32). இவருடைய பாட்டி ரீத்தா அம்மாள் (80). இவர் அதே ஊரில் தனியாக வசித்து வந்தார்.


ரீத்தா அம்மாளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீடு இருந்தது. அந்த வீட்டை தனது பெயருக்கோ அல்லது தனது தாய் பால்கனி பெயருக்கோ எழுதி தரவேண்டும் என்று கூறி ஜெயக்குமார், தனது பாட்டியிடம் கடந்த 29–3–2015 அன்று கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரீத்தா அம்மாளை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி அப்துல்காதர் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.