மாவட்ட செய்திகள்

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது + "||" + In Tenkasi Kasivishasunatha Swamy temple Masi festival

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி,

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காசிவிசுவநாத சுவாமி கோவில்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையொட்டி அதிகாலை 5.20 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சங்கர், நாடார் சங்க தலைவர் ராஜசேகர், அய்யப்ப சேவா சங்க அமைப்பு செயலாளர் எஸ்.மாரிமுத்து, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையா பாண்டியன், முன்னாள் ஆசிரியர் சோலை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா வருகிற 1–ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலையில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும், அதை தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.

தேரோட்டம்

9–ம் திருநாளான வருகிற 28–ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.