அம்பையில் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி போலீசார் விசாரணை


அம்பையில் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2018 2:00 AM IST (Updated: 20 Feb 2018 6:57 PM IST)
t-max-icont-min-icon

அம்பையில் பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அம்பை,

அம்பையில் பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சோலைகாலனி பெரியகருப்பத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). இவர் அம்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு அட்டை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வாரம் ஒருமுறை ஊருக்கு சென்று விட்டு வருவார்.

இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி வேலையை முடித்து விட்டு ஊருக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். ஆனால் அவரது வீட்டில் கதவு திறக்காததால் அவருடன் வேலை செய்பவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது, வீட்டில் ரமேஷ் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக அம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரமேஷ் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் இறந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே ரமேஷ் எப்படி இறந்தார் என்ற முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story