தூத்துக்குடியில் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழா எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தகவல்


தூத்துக்குடியில் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழா எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2018 2:00 AM IST (Updated: 20 Feb 2018 7:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருகிற 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வருகிற 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

பிறந்த நாள்


தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாள் விழா வருகிற 24–ந்தேதி தூத்துக்குடி டூவிபுரம் 7–வது தெருவில் உள்ள எனது (எஸ்.பி.சண்முகநாதன்) எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்

அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் தங்கள் பகுதிகளில், மறைந்த முன்னாள் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story