நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:00 PM GMT (Updated: 20 Feb 2018 3:16 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.

கருப்பு துணி கட்டி போராட்டம்

துப்புரவு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் திருமாவளன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகரசபை, நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பொது சுகாதார பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பகுதி நேர பணியாளர்கள் என்று பணியாற்றி வருகிறார்கள். மனித நேயத்துடன் பணியாற்றும் இந்த துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள மறுவாழ்வினை உறுதி செய்திடவேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு என்று தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்தவேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story