சுங்கச்சாவடியில் லாரி மோதி ஊழியர் சாவு டிரைவர் கைது
போரூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதியதில், அங்கு வேலைபார்த்து வந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வழக்கம் போல் அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வண்டலூரில் இருந்து மாதவரம் நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி சுங்கச்சாவடியின் வரி வசூலிக்கும் 5-வது கவுண்ட்டர் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் வசூல் மையத்திற்கு வெளியே நின்று கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் தமார் டக்குவா (வயது 24), என்பவர் மீது லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
லாரி மோதியதில் வசூல் மையத்தின் ஒரு பகுதி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த சந்தீர் செட்டி(32), நில்மதுஷா (18) மற்றும் மணி(53) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராகேஷ் தமார் டக்குவா உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் சக்திவேல்(32), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story