மஞ்சூர் அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலி
மஞ்சூர் அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி விழுந்தது. அதை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்கிமலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இதன் அருகே வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள தேயிலை தோட்டத்தில் 3 கிணறுகள் உள்ளன. இதில் 2 கிணறுகளில் வனவிலங்குகள் எதுவும் விழுந்து விட கூடாது என்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு மூடி போடப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு கிணற்றில் மூடி இல்லை. அது 50 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணறு ஆகும். தற்போது கிணற்றில் 3 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் முக்கிமலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை பறிக்க சென்றனர். அப்போது கிணற்றுக்குள் உறுமல் சத்தம் கேட்டது. உடனே தொழிலாளர்கள் அந்த கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். கிணற்றுக்குள் ஒரு சிறுத்தைப்புலி அங்கும், இங்கும் உலாவிக்கொண்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குந்தா வனச்சரகர் ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை உயிருடன் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள், இப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் அட்டகாசம் அதிகரித்து விட்டது. எனவே கிணற்றுக்குள் கிடக்கும் சிறுத்தைப்புலியை மயக்க ஊசி போட்டு பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றனர்.
அவர்களிடம், கிணற்றுக்குள் இருக்கும் சிறுத்தைப்புலிக்கு 2 வயது இருக்கும். இரையை தேடி வந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கிறது. கிணற்றில் 3 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் அது நீரில் மூழ்கவில்லை. நீண்டநேரமாக கிணற்றுக்குள் இருப்பதால் அது சோர்வாக காணப்படுகிறது. எனவே தற்போது சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தினால் அது ஆபத்தான நிலைக்கு சென்று விடும் என்று வனத்துறையினர் கூறினர்.
பின்னர் வனத்துறையினர், பெரிய இரும்பு ஏணியை கிணற்றுக்குள் போட்டு சிறுத்தைப்புலியை வெளியே கொண்டு வர முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து இரும்பு ஏணி மீது சிறுத்தைப்புலி ஏறி வருவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைத்தனர்.
அதன்பிறகு வனத்துறையினர் 35 அடி உயரமுள்ள இரும்பு ஏணியை கயிற்றால் கட்டி மெதுவாக கிணற்றுக்குள் இறங்கினார்கள். அதை பார்த்ததும் சிறுத்தைப்புலி சத்தமாக உறுமியது. இதற்கிடையில் அங்கு கிராம மக்கள் திரண்டனர். அவர் களை வனத்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும், கிணற்றுக்குள் இருந்து வெளியே வரும் சிறுத்தைப்புலி ஆக்ரோஷத்துடன் வரும். அதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட கூடும் என்று எச்சரித்தனர். இதனால் கிராம மக்கள் அங்கிருந்து ஓடி சற்று தொலைவில் நின்று கொண்டனர். அவர்கள் கிணற்று பக்கம் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர்.
இதையடுத்து வனத்துறையினர் நீண்ட நேரம் சத்தம் எழுப்பி சிறுத்தைப்புலியை இரும்பு ஏணியில் ஏற வைத்தனர். சிறுத்தைப்புலி இரும்பு ஏணி படிக்கட்டில் ஏற தொடங்கியதும், வனத்துறையினர் ஏணியில் கட்டி இருந்த கயிற்றை மெதுவாக மேலே தூக்க தொடங்கினர். அப்போது சிறுத்தைப்புலி நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.
பின்னர் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சித்து, இரும்பு ஏணியில் சிறுத்தைப்புலியை ஏற வைத்த னர். அது ஏணியில் ஏற தொடங்கியதும் வனத்துறையினர் மிகுந்த கவனமாக கயிற்றை மேல் நோக்கி இழுத்தனர். இதனால் சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் இருந்து மேல் நோக்கி வந்தது. அப்போது சிறுத் தைப்புலி தங்கள் மீது பாய்ந்து விடாமல் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட் டனர்.
கிணற்றை விட்டு வெளியே வந்த சிறுத்தைப்புலி அங்கிருந்து துள்ளிக்குதித்து ஓடி தேயிலை செடிக ளுக்குள் மறைந்து கொண்டது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மீட்டனர்.

Related Tags :
Next Story