அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல அலுவலகம் முன் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மண்டல பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். காரைக்குடி கோட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர்களை போல் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும், மருத்துவ காப்பீட்டு தொகை, இறப்பு நிவாரண தொகை, பஞ்சப்படி உயர்வு நிலுவையை உடனே வழங்கவேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களையும், வாரிசு பணி நியமனத்தையும் வழங்கவேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மண்டல பொதுச்செயலாளர்கள் ஆரோக்கியம், ராஜசேகர், சுப்பிரமணி ஆகியோர் பேசினார்கள். முடிவில் திருச்சி மண்டல பொருளாளர் எத்திராஜ் நன்றி கூறினார்.
அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மலைக்கோட்டை கிளை பணிமனை முன் நேற்று முன்தினம் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் கீழ் இயங்கும் 4 மண்டலங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பேட்டாவுடன், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் காப்பீடுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story