கன்னியாகுமரி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் எனது உயிருக்கு ஆபத்து
கன்னியாகுமரியில் அமைக்கப்படும் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பச்சைத்தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவரும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.
நான் பிறந்து வளர்ந்து வாழும் குமரி மாவட்டம் மாபெரும் இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ‘கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகம்‘ என்கிற பெயரில் ஓர் திட்டம் குமரி முனை அருகே திட்டமிடப்படுவதாக அறிந்து, அந்த திட்டம் இயற்கைக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும், உடல் நலனுக்கும் உகந்ததல்ல என்கிற அடிப்படையில் ஜனநாயக முறையில், அமைதி வழியில் இந்த திட்டத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகிறேன். எதிர்ப்பு போராட்டக்குழுவில் நான் தலைவராகவோ, உறுப்பினராகவோ பணியாற்றவில்லை.
தற்போது என்னையும், ஓய்வுபெற்ற அறிவியலாளர் லால்மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் போன்றோரையும் பெயர் குறிப்பிட்டு அன்னிய கைக்கூலிகள் என்று தரக்குறைவாக மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
எங்களைக்குறித்து வன்முறையைத் தூண்டும் கருத்துக்களையும் பொதுமேடைகளில் பேசி வருகிறார்கள்.
இம்மாதிரியான பாசிச போக்கும், அணுகுமுறையும் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் நேரடி ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும், நாங்கள் வசிக்கும் பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடுமானால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றார். அவருடன் பச்சைத்தமிழகம் கட்சி நிர்வாகிகள் சங்கர பாண்டியன், அகஸ்டின் செல்வராஜ் மற்றும் பலர் வந்திருந்தனர்.
பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஆகியோரிடமும், கோட்டார் போலீஸ் நிலையத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்.

Related Tags :
Next Story