விருத்தாசலம் அருகே லாரி-கார் மோதல்: மனைவியுடன் என்.எல்.சி. அதிகாரி பலி
விருத்தாசலம் அருகே லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் என்.எல்.சி. அதிகாரி மனைவியுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கணபதிபாண்டியன்(வயது 48). என்.எல்.சி. சுரங்கம் 1ஏ-வில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சபிதா(44). இவர்களது மகள் சுவேதவர்ஷினி(21). இவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
கணபதிபாண்டியன் நெய்வேலி வட்டம் 18-ல் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணபதிபாண்டியனும், அவரது மனைவி சபிதாவும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றனர். பின்னர் அங்கு விழாவை முடித்துவிட்டு அதே காரில் ஊருக்கு திரும்பினர். காரை கணபதிபாண்டியன் ஓட்டினார்.
நள்ளிரவு 1 மணியளவில் விருத்தாசலம் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது, விருத்தாசலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணம் செய்த கணபதிபாண்டியன், சபிதா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே டிரைவர், லாரியை சாலையிலேயே நிறுத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான கணபதிபாண்டியன், சபிதா ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story