பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விமான நிலையம், பொதுக்கூட்ட மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி 25-ந்தேதி வருகிறார். இதனை முன்னிட்டு விமான நிலையம், பொதுக்கூட்ட மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பந்தல் மற்றும் சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி,
புதுவை அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் உதயதின 50-வது ஆண்டு பொன்விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார். லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 10.45 மணிக்கு வரும் பிரதமர் மோடிக்கு, கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அவர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் தியானம் செய்கிறார். தொடர்ந்து அங்கிருந்து ஆரோவில் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் பொன்விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்த பின்னர் நேராக லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அருகில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி புதுவை வருகை உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவை போலீசார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுவை விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து அரவிந்தர் ஆசிரமம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை காமராஜர் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அரவிந்தர் ஆசிரமத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story