வைத்தியநாத சுவாமி, குற்றம் பொறுத்தவர் கோவில்களில் மாசிமக பெருவிழா
திருமழபாடி, சு.ஆடுதுறையில் உள்ள வைத் தியநாத சுவாமி, குற்றம் பொறுத்தவர் கோவில்களில் மாசிமக பெரு விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமழபாடியில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விநாயகர் பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் மற்றும் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர், பாலாம்பிகை ஆகிய தெய்வங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொடிமரத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு தேவாரம், திருவாசகம் முழங்க நந்திவாகனம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் சிவ, சிவா எல்லாம் வல்ல இறைவா போற்றி, தென்னாற்றுடைய சிவனே போற்றி, போற்றி என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரவு சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் ஆதிசேஷ வாகனம், பூதவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் குற்றம் பொறுத்தவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு யாகசாலை அமைக்கப்பட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணியளவில் விநாயகர், சுவாமி, அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்ன மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சுவாமி, அம்மன் உற்சவ மூர்த்திகள் கொடி மரத்தின் கீழே கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கார்த்திக், சண்முகம் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இரவு விநாயகர், சுவாமி, அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் சன்னாசி, செயல் அலுவலர் ரமேஷ், கோவில் கணக்கர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சு.ஆடுதுறை, ஒகளூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story