ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்


ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2018 3:45 AM IST (Updated: 21 Feb 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதுதொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். சக்திவேல் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு சேலத்தில் பெரியார் சிலையில் இருந்து அண்ணாசிலை வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதில் சேலம் மாநகரில் இதுவரை இல்லாத வகையில் திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் வட்ட செயலாளர்கள் வார்டுதோறும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். மண்ணின் மைந்தர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன பின்னர் சேலம் மாநகருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில், அவர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்ட உண்மையான தொண்டர்கள் ஒருவர்கூட டி.டி.வி.தினகரன் அணிக்கு செல்லவில்லை. சேலம் மாநகரில் அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பொருளாளர் பங்க் வெங்கடாசலம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் கோபால், சுப்பிரமணியநகர் கூட்டுறவு வங்கி தலைவர் சுந்தரபாண்டியன், மேற்கு தொகுதி முன்னாள் செயலாளர் கே.சி.செல்வராஜ்,. 1-வது வார்டு செங்கோட்டையன் மற்றும் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story