பென்சில் முனையில், 4 சென்டி மீட்டர் உயரத்தில் நரேந்திரமோடி உருவம்


பென்சில் முனையில், 4 சென்டி மீட்டர் உயரத்தில் நரேந்திரமோடி உருவம்
x
தினத்தந்தி 21 Feb 2018 4:14 AM IST (Updated: 21 Feb 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

சரவணபெலகோலாவில் நடந்த கண்காட்சியில் பென்சில் முனையில் 4 சென்டி மீட்டர் உயரத்தில் நரேந்திரமோடியின் உருவத்தை கலைஞர் ஒருவர் வடிவமைத்தார். இது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், உள்ள 57 அடி உயர பாகுபலி சிலைக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகாமஸ்தகாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று சரவணபெலகோலாவில் கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்துகொண்டு தாங்கள் வடிவமைத்த கண்கவர் பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தனர். இதில் பெலகாவி மாவட்டம் பாவகடா பகுதியை சேர்ந்த வினோதா சந்திரகாந்த் குதிகவாடு என்ற கலைஞர் பென்சில் முனையில் 4 சென்டி மீட்டர் உயரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை வடிவமைத்திருந்தார். இது கண்காட்சியை பார்வையிட்ட அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

மேலும் அவர் பென்சில் முனையில் அழகான உருவங்களை கலைநுட்பத்துடன் செதுக்கி கண்காட்சிக்கு வைத்திருந்தார். மேலும் பென்சில் முனையில் ½ சென்டி மீட்டர் உயரத்தில் பாகுபலியின் முகத்தை செதுக்கியிருந்தார்.

இதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்றும், ஹாசனில் உள்ள சுற்றுலா தலங்கள், இந்தியா என்கிற வார்த்தையும் அழகு ததும்ப பென்சில் முனையில் செதுக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இவை அனைத்தையும் நுண்ணோக்கி மூலம் மட்டுமே தெளிவாக காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story