செக் குடியரசு நாட்டை சேர்ந்த 40 பேர் சாமி தரிசனம்


செக் குடியரசு நாட்டை சேர்ந்த 40 பேர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 21 Feb 2018 5:19 AM IST (Updated: 21 Feb 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 40 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று செக் குடியரசு நாட்டை சேர்ந்த 40 பேரை கொண்ட சுற்றுலா குழுவினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், வில்வநாதன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், காலசம்ஹார மூர்த்தி, 63 நாயன்மார்கள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள கலைநயமிக்க சிலைகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இந்த குழுவை சேர்ந்த 3 பேர் ஆயுள் ஹோமம் செய்து கொண்டனர். இதற்கான பூஜைகளை கணேஷ் குருக்கள் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து சுற்றுலா குழுவினர் திருநள்ளாறு கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story