தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 2-வது நாளாக ஆய்வு
தஞ்சை-திருச்சி இருவழிப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 2-வது நாளாக ஆய்வு செய்தார். அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை பணிகளுக்கு கடந்த 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தஞ்சை-திருச்சி பொன்மலை இடையே 49 கி.மீ. தூரத்துக்கு ரூ.450 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பணிகள் தொடங்கப்பட்டன.
தஞ்சை-திருச்சி இடையே ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதை இருந்த இடத்தில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது. இதற்காக இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும் இந்த இருவழிப்பாதைக்காக பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
முதல் கட்டமாக திருச்சி பொன்மலையில் இருந்து பணிகள் தொடங்கி சோளகம்பட்டி வரை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது கட்டமாக சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை ரெயில் நிலையம் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை ரெயில் என்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரெயில்வே முதன்மை நிர்வாக அலுவலர்(கட்டுமானம்) சுதாகர்ராவ் உள்பட 12 பேர் கொண்ட குழுவினர் 5 டிராலிகளில் தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை சோதனை நடத்தினர். நேற்று 2-வது நாளாகவும் அவர்கள் தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை 35 கி.மீ தூரத்திற்கு அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை செய்தனர்.
இதற்காக திருச்சியில் இருந்து 1 என்ஜின், 3 பெட்டிகளுடன் அதிவேகமாக செல்லும் சிறப்பு ரெயில் தஞ்சை மேம்பாலம் அருகே காலை 10 மணிக்கு வந்தது. அங்கு பூஜைகள் போடப்பட்டது. 12.30 மணிக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் குழுவினர் வந்தனர். அதிவேக ரெயிலில் அவர்கள் அமர்ந்தவுடன் 120 கி.மீ வேகத்திற்கு ரெயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

Related Tags :
Next Story