மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி 202 பேர் மனு
தூத்துக்குடியில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் கோரி 202 பேர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் தாய்லாந்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முத்துகாமாட்சி நிதியுதவி கோரி மனு கொடுத்தார். உடனடியாக அந்த மனுவை பரிசீலனை செய்த கலெக்டர், அவருக்கு நிதியுதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலி கருவியையும் கலெக்டர் வழங்கினார்.
202 பேர் கோ£க்கை மனு
இது குறித்து கலெக்டர் வெங்கடேஷ் கூறும் போது, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், மாத பராமரிப்பு உதவித்தொகைகள், வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 202 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story