கர்நாடகாவுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன
வேலூரில் இருந்து கர்நாடகாவுக்கு 107 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வேலூர்,
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அண்டை மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்று கர்நாடகாவுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களும் கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 107 வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழக–கர்நாடக மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் நேற்று எடுத்து செல்லப்பட்டன. இப்பணிகள் வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story