சார்பு நீதிமன்றம், நீதிபதிகளின் குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா
அரக்கோணத்தில், ரூ.4¾ கோடியில் சார்பு நீதிமன்றம், நீதிபதிகளின் குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அரக்கோணம்,
அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.4 கோடியே 77 லட்சம் மதிப்பில் சார்பு நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு நில ஆர்ஜித நீதிபதி கே.அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லாவண்யா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி கலந்துகொண்டு, சார்புநீதிமன்றம், நீதிபதிகளின் குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதில் வக்கீல்கள் என்.தமிழ்மாறன், ரவி, அரிபாபு, ரமணி மற்றும் நீதிமன்ற அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story