உளுந்தூர்பேட்டையில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள களமருதூர், செங்குறிச்சி, பரிக்கல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினந்தோறும் காலை தங்களது கிராமங்களில் இருந்து இலவச பஸ் பாஸ் மூலம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்கு வருவார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து விருத்தாசலத்துக்கு இயக்கப்படும் 3 அரசு பஸ்களில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மற்ற 2 அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பெரும் சிரமங்களுக்கு இடையே கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் இருந்து 2 அரசு பஸ்களில் விருத்தாசலம் கல்லூரிக்கு புறப்பட்டனர். பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். அந்த பஸ்கள் உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பஸ்களில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் அந்த 2 பஸ்களையும் சிறைபிடித்து, திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், சட்டத்துக்கு புறம்பாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபடுவது தவறான செயலாகும். உங்களது கோரிக்கைகளை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரிகளிடம் கூறி தீர்வு காணுமாறு அறிவுரை கூறினர். இதனை ஏற்ற மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து போக்குவரத்துக்கழக பணிமனை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story