வாட்ஸ்-அப்பில் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்-அப்பில் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்து உள்ளார்.
பெரம்பலூர்,
ஓட்டல், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவு பொருட்கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் அதனை வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கும் வகையிலான தொலைபேசி எண் உணவுப்பாதுகாப்புத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய வாட்ஸ்-அப் எண் குறித்த அறிவிப்பு அடங்கிய விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா வெளியிட, மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் சவுமியா சுந்தரி பெற்றுக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், மளிகை கடை உரிமையாளர்கள், சில்லரை வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், காய்கறி மற்றும் பழக்கடை உரிமையாளர்கள், சாலையோரக்கடைகள், பால் விற்பனையாளர்கள், ரேஷன் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் ஆகிய உணவு வணிக நிறுவனங்களில் உணவு பொருட்களில் கலப்படம், தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வது, உண்ணும் உணவு தரம் குறைவாக இருத்தல், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது, உணவுபொட்டலத்தில் இந்திய உணவுப்பாதுகாப்பு துறையின் பதிவு-உரிமம் எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படாத பொருட்கள் விற்பனை செய்தல் பற்றிய புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்்கலாம்.
கொடுக்கப்பட்ட புகார் களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பற்றிய விளக்கங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அலுவலரை 04328-224033 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story