சேலம் தொழிலாளர்களின் உடல்கள் அடக்கம்
ஆந்திராவில் மர்மமான முறையில் இறந்த சேலம் தொழிலாளர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் நீதி விசாரணை நடத்தக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை அருகே உள்ள பெரியகல்வராயன் மலை கிராமங்களான கிராங்காடு, ஆவாரை போன்ற பகுதிகளில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கிராங்காடு பகுதியை சேர்ந்த சி.முருகேசன் (வயது 45), ஜெயராஜ் (25), ஏ.முருகேசன்(42), கருப்பண்ணன் (23), சின்னபையன் (40) ஆகிய 5 தொழிலாளர்களும் கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் மலை அடிவாரத்தில் உள்ள ஏரியில் இவர்கள் 5 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் ஒண்டிமிட்டா போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்காக உறவினர்களை தமிழக போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கடப்பாவுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இறந்தவர்களின் உடல்கள் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் 5 பேரின் உடல்களும் சொந்த ஊரான கிராங்காடு கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தேசிய மலைவாழ் மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர் உடல்களை கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்பு அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர போலீசார் தொழிலாளர்களை கொன்று ஏரியில் வீசி உள்ளனர். எனவே இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.
5 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. உடல்களை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் 5 பேரின் உடல்களும் தனித்தனியாக அடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-
எங்களது கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களை புரோக்கர் ஏமாற்றி, செம்மரங்களை வெட்டி கடத்த அழைத்து சென்று விடுகிறார்கள். தற்போது இறந்த 5 தொழிலாளர்களும் செம்மரம் வெட்ட சென்ற போது, ஆந்திர போலீசார் துரத்தியதால் ஏரியில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று முதலில் கூறினார்கள். ஆனால் அந்த ஏரியில் இடுப்பளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் விழுந்து இறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களை கொன்று வீசி இருக்கலாம்.
மேலும் செம்மரக்கடத்தலுக்கு துணை போக மறுத்ததால், புரோக்கர்களுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது. அவர்களின் சாவில் மர்மம் நீடிப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நீதி விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட வேண்டும்.

Related Tags :
Next Story