பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 22 Feb 2018 3:00 AM IST (Updated: 22 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி,

 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இயற்கை எழில் சூழ மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அருவிக்கு அதிக அளவு நீர்வரத்து ஏற்படும். அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை.

மழை இல்லாத காலங்களில் நீர்வரத்து சீராக காணப்படும். அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து சீராக இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெளியூர்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். தற்போது மழை இல்லாத காரணத்தினால் நீர்வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் நீர் வரத்து சீராக வந்த பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story