தனியார் மருத்துவமனையின் 2–வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
பந்தளம் பகுதியில், தனியார் மருத்துவமனையின் 2–வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர், மகன் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திண்டுக்கல்,
பந்தளம் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார். விவசாயி. அவருடைய மனைவி ஸ்ரீகலா (வயது 35). இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளார். ஸ்ரீகலாவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதில் இருந்து ஸ்ரீகலா மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மகன் மாதவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஜய்குமார் தனது மகனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் ஸ்ரீகலாவும் உடன் சென்றுள்ளார். பின்னர் டாக்டரை பார்த்து விட்டு அஜய்குமார் மனைவி, மகனுடன் வெளியே வந்துள்ளார்.
அப்போது திடீரென ஸ்ரீகலா மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார். பின்னர் 2–வது மாடிக்கு சென்ற அவர், திடீரென மாடியில் இருந்து குதித்தார். கணவர், மகன் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பந்தளம் போலீசார் விசாரணை நடத்தினர். மனநிலை பாதிப்பு இருந்ததால் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story