கரூரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது


கரூரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2018 4:45 AM IST (Updated: 22 Feb 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கரூர்,

கரூரை சேர்ந்த புலியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையோரம் ஆந்திர மாநிலம் தனஸ்தாலம் அருகே உள்ள கோவாடா கிராமத்தை சேர்ந்த போத்தையாவின் மகன் கோவிந்தா (வயது 19) என்பவர் ஹெல்மெட்டுகள் மற்றும் கண் கண்ணாடிகளை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 பேர் அவரிடம் ஹெல்மெட் வாங்க வந்தனர். அப்போது அவர்கள் ஒரு ஹெல்மெட்டை வாங்கியதும் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தனர். அந்த நோட்டை வாங்கி பார்த்த கோவிந்தா சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்களிடம் அந்த ரூபாய் நோட்டை காண்பித்து விபரம் கேட்டார். அப்போது அந்த நோட்டு கள்ளநோட்டு என தெரிய வந்தது. இதையடுத்து ஹெல்மெட் வாங்க வந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் பிடித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரில் 2 பேர் கரூர் வெங்கமேடு செல்வநகரை சேர்ந்த உதயகுமார்(29), கரூர் ஆசிரியர் காலனி ராமானுஜநகர் தெற்குபகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)என்பதும், மற்றொருவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த முருகன் (54) என்பதும் மேலும்அவர்கள் வைத்திருந்தது கள்ளநோட்டுகள் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 5 பறிமுதல் செய்யப்பட்டது.அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story