ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:15 AM IST (Updated: 22 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையத்தில் உள்ள சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்க கொட்டகையும் அகற்றப்பட்டது. இதை கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கம் சார்பில் காமராஜ் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிற் சங்க நகர தலைவர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஹனிபா, நகர செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story