போலீசுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ.13½ கோடி கட்டண பாக்கி


போலீசுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ.13½ கோடி கட்டண பாக்கி
x
தினத்தந்தி 22 Feb 2018 3:53 AM IST (Updated: 22 Feb 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

மைதானத்தில் பாதுகாப்பு வழங்கிய வகையில் போலீசுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கம் ரூ.13½ கோடி கட்டண பாக்கி வைத்து உள்ளது.

மும்பை,

மும்பையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சி, ஐ.பி.எல். உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கிரிக்கெட் மைதானத்தில், மும்பை போலீசார் சார்பில் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போலீஸ் பாதுகாப்புக்கான கட்டணத்தை மும்பை போலீசுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கம் சரியாக செலுத்தாமல் அதிகளவில் பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்கலி மும்பை கிரிக்கெட் சங்கம் போலீசுக்கு தரவேண்டிய கட்டண பாக்கி குறித்த விவரங்களை மும்பை போலீசில் கேட்டிருந்தார்.

அவருக்கு மும்பை போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்டு உள்ள பதிலில், கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரையில் மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டிகளின்போது, பாதுகாப்பு வழங்கப்பட்ட வகையில் ரூ.34 கோடியை மும்பை கிரிக்கெட் சங்கம், மும்பை போலீசுக்கு தவணை முறையில் செலுத்தி உள்ளது.

அதன்பின்னர் தற்போது வரை பாதுகாப்பு வழங்கியதற்காக ரூ.13 கோடியே 42 லட்சத்தை பாக்கி வைத்து உள்ளது. இந்த தொகையை இன்னும் மும்பை கிரிக்கெட் சங்கம் செலுத்தவில்லை என தெரிவித்து உள்ளது. 

Next Story