மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு
x
தினத்தந்தி 22 Feb 2018 3:55 AM IST (Updated: 22 Feb 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா வருகிற 4-ந் தேதி தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் திருவிழா அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தற்காலிக கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுற்றுலா வாகனங்களிலும், பஸ்களிலும் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலை சுற்றி பார்வையிட்டு பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும், வெட்டுமடை, நடுவூர்க்கரை பஸ் நிலையம், லட்சுமிபுரம் போன்ற பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி, மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story