வேலை வாய்ப்பு முகாமில் 493 பேருக்கு பணிநியமன ஆணை
மார்த்தாண்டத்தில் அரசு சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 493 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
குழித்துறை,
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை, மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் நேற்று காலை முதல் மாலைவரை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 85 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் கலந்து கொண்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்களையும், கல்வி சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு நேர்முக தேர்வு நடத்தினார்கள்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களில் 493 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இளைஞர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எனவே தான் மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவினை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 84 லட்சத்து 21 ஆயிரத்து 455 மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டில் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 337 பேர் ஆவார்கள். மேலும் 18 வயது முதல் 23 வயதுக்குட்பட்ட மேல்நிலை கல்வி படிக்கும் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் உள்ளனர். இவர்களில் பலர் வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களும் அரசு வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 23 பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க ஏற்கெனவே ஒரு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இப்போது ஓகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இது போன்ற முகாம்களை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக இந்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்று தான் வேலை வாய்ப்பு முகாம். குமரி மாவட்டத்தில் இது போன்ற மாபெரும் முகாம் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
கடந்த 30-11-17 அன்று இந்த மாவட்டம் சந்தித்த ஒகி புயலால் பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயம் மற்றும் இதர குடும்பத்தினரின் மறுவாழ்வினை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும் இந்த முகாம் அரசால் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பயன்பெற வந்துள்ள இளைய சமுதாயத்தினரை நான் பாராட்டுகிறேன்.
இதில் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பி.ஜோதிநிர்மலா சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் 30 சதவீதம் பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். பிற மாநிலங்களிலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் உள்ளனர். மாணவர்கள் திறன் வளர்ப்பு பயிற்சிகளும் பெற வேண்டும். அதற்கான திறன் வளர்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது‘ என்று குறிப்பிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, விஜயதரணி எம்.எல்.ஏ., தொழிலாளர் கூடுதல் ஆணையர் சரவணன், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் காளியண்ணன், மதுரை கூடுதல் இயக்குனர் சிதம்பரநாதன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் க.நிறைமதி (நெல்லை), வி.எஸ்.சரவணன் (தூத்துக்குடி), குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி காளிமுத்து, மக்கள் தொடர்பு அலுவலர் கலையரசன், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் மோகன்குமார், கல்லூரி விழா அமைப்பாளர் பேராசிரியர் கோல்டின் அப்ரிக் சாம், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், அரசு வக்கீல்கள் ஞானசேகர், சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணை ஆணையர் அனுஷ்யா செல்வி வரவேற்று பேசினார். முடிவில் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர் நிலோபர்கபில் நேற்று காலையில் கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்வையிட்டார். அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
மேலும், திருவள்ளுவர் சிலையையும் அவர் பார்த்து ரசித்தார். அவருடன் விஜயகுமார் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story