ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் இடிப்பு
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் அருகே ஓட்டேரியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 22 கிலோ மீட்டர் தூரம் கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி ரூ.22½ கோடி செலவில் பொதுப்பணித்துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 300-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. இந்த நோட்டீசை பெற்ற அவர்கள் தங்களுக்கு மாற்று இடத்தை நகராட்சி பகுதியிலேயே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது வரை வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டி இருந்த 6 கடைகள் இடிக்கப்பட்டன. மேலும் வீடுகளை இடிக்க அதில் உள்ள மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டிக்க வந்தனர். அவர்களை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நேற்று முன் தினமும் மின் இணைப்பை துண்டிக்க வந்த மின்வாரிய ஊழியர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து விட்டு சென்றார். அதன்பிறகு ஆக்கிரமித்து கட்டியுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.
அதன்படி நேற்று வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் வந்து ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். ஒரு சிலர் வீடுகளில் உள்ள பொருட் களை எடுத்து காலி செய்து கொடுத்தனர். அந்த வீடுகளை பொதுப்பணித்துறையினர் பொக் லைன் எந்திரத்தை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.பொருட் களை காலிசெய்யாமல் இருந்த வீட்டை இடித்த போது, அந்த வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அந்த வீட்டில் இருந்த பொருட்களை அவர் எடுத்த பிறகு அந்த வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதேபோல் வீடுகளை காலி செய்ய, செய்ய அந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
இது பற்றி தாசில்தார் பாலமுருகனிடம் கேட்ட போது, புதுப்பாளையம் முதல் தேவனாம்பட்டினம் வரை 330 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அதில் 120 வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டோம். வீடுகளை காலி செய்த பிறகு தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும். ஏற்கனவே 6 கடைகள் இடிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலூர் தரைக்காத்த காளியம்மன்கோவில் வழியாக புதுப்பாளையம் செல்ல போலீசார் தடை விதித்து தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தனர். மதியம் வரை வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். அதன்பிறகு பிரச்சினை ஏதும் நடைபெறாததால் வாகனங்கள் சென்று வர போலீசார் அனுமதித்தனர்.

Related Tags :
Next Story