1 முதல் 10–ம் வகுப்பு, பி.யூ.சி. ஆகிய அனைத்து வகுப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர முடிவு


1 முதல் 10–ம் வகுப்பு, பி.யூ.சி. ஆகிய அனைத்து வகுப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர முடிவு
x
தினத்தந்தி 22 Feb 2018 5:37 AM IST (Updated: 22 Feb 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. ஆகிய அனைத்து வகுப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது என சட்டசபையில் மந்திரி தன்வீர்சேட் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சோமசேகர், பா.ஜனதா உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் கேட்ட கேள்விக்கு கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் பதிலளிக்கையில் கூறியதாவது:–

மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு புதிதாக பி.யூ. கல்லூரிகளை அரசு தொடங்குகிறது. இதில் அரசு பாரபட்சம் பார்ப்பது கிடையாது. எங்கெங்கு கல்லூரிகள் தொடங்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கெங்கேரியில் தனியார் மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரிகள் இருக்கின்றன.

கெங்கேரிக்கு அருகில் உள்ள தெட்டேரியில் அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. அதில் 37 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கெங்கேரி மற்றும் தாவரகெரேயில் பி.யூ.கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. ஆகிய அனைத்து வகுப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு மானியம் பெறும் ஊழியர்கள் மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை அமல்படுத்த ரூ.359 கோடி நிதி தேவைப்படுகிறது. நிலுவைத்தொகை உள்பட அனைத்தையும் அமல்படுத்த அரசுக்கு ரூ.5,600 கோடி தேவை.

இவ்வாறு தன்வீர்சேட் கூறினார்.


Next Story