உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவால் சட்டசபை தாமதமாக கூடியது
கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டும்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டும். ஆனால் அழைப்பு மணி அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருந்தது. 11.20 மணி வரை சபையில் 16 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பினராக சபைக்கு வந்தனர். 11.30 மணியளவில் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். அதைத்தொடர்ந்து சபை 1 மணி நேரம் தாமதமாக கூடியது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தை நடத்த சபாநாயகர் கே.பி.கோலிவாட் அனுமதி வழங்கினார். 15 உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அரசு பதில் வழங்கியது. இதில் 11 உறுப்பினர்கள் நேற்று சபைக்கு வரவில்லை. மந்திரிகள் அமரும் இருக்கைகள் பெரும்பாலானவை காலியாக இருந்தன. தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை. சபை நாளையுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
Related Tags :
Next Story