அபூர்வ நாள்... அதிசய தகவல்கள்...


அபூர்வ நாள்... அதிசய தகவல்கள்...
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 22 Feb 2018 12:28 PM IST)
t-max-icont-min-icon

பிப்ரவரி 29 ‘லீப் நாள்’ என்றும், லீப் நாள் கொண்ட வருடம் ‘லீப் ஆண்டு’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

பிப்ரவரி 29-ல் பிறந்தநாள் கொண்டவர்கள் ‘லீப்லிங்ஸ்’ என்றும், ‘லீப்பர்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு வயது கூடுதலாகும். அவர்கள் பிப்ரவரி 28 அன்றோ அல்லது மார்ச் 1 அன்றோ தங்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். சிலர் நட்சத்திரத்தை பின்பற்றி பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். பிரபலமான கவிஞர் பைரன், லீப் தினத்தில் பிறந்தவர்தான்.

மன்னர் ஜூலியஸ் ஜீஸர், கி.மு. 46-ம் ஆண்டில் லீப் தினத்தை காலண்டர் முறையில் சேர்க்கும் ஆணையை பிறப்பித்தார்.

பிப்ரவரி மாதம் மற்ற மாதங்களைக் காட்டிலும் சீக்கிரமே முடிந்துவிடும். பிப்ரவரி 29-ந் தேதியில் உங்கள் நண்பர், தோழி யாருக்காவது பிறந்த நாள் இருந்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்த நாள் வரும். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வந்து சென்ற பிப்ரவரி 29-ந்தேதி, இன்னும் இரண்டு வருடம் கழித்து 2020-ல்தான் வரப்போகிறது. இப்படி 4 ஆண்டிற்கு ஒருமுறை, மட்டுமே வரும் பிப்ரவரி 29, ‘லீப் நாள்’ என்றும், ‘லீப் நாள்’ கொண்ட வருடம் ‘லீப் ஆண்டு’ என்றும் குறிப்பிடப்படுகிறது. புவியின் சுழற்சியின் அடிப்படையில் இந்த நாள் கணக்கிடப்படுகிறது. இந்த அரிய தினம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அபூர்வ மற்றும் அதிசயத் தகவல்களை பார்ப்போம்...

* பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்களும், சுமார் 6 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது. இந்த 365 நாட்களை, நாம் ஒரு ஆண்டாக கணக்கில் கொள்கிறோம். கூடுதலாக இருக்கும் 6 மணி நேரமானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூடுதலாக ஒரு நாளாக சேர்ந்துவிடுவதால் அது லீப் தினமாகவும், லீப் வருடமாகவும் கணக்கில் எடுக்கப்படுகிறது.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவர், ‘லீப் ஆண்டின் தலைநகராக’ தங்கள் மாகாணத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். ஏனெனில் அங்கு ‘பிப்ரவரி 29’, திருவிழா போல கொண்டாடப்படுகிறது. அஸ்டெக் கேவ் என்ற இடத்தில் குதிரை நடனம், சிறப்பு விருந்து என விழா களைகட்டுகிறது.

* பிப்ரவரி 29 அரிய நோய் தினமாகவும் கருதப்படுவது உண்டு.

* ஜோதிடர்கள், பிப்ரவரி 29-ல் பிறந்தவர்கள் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். நிச்சயம் அவர்கள் ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்தவர்களாக உருவெடுப்பார்களாம்.

* ஹக் ஹெப்னர், தனது பிளேபாய் கிளப்பை 1960-ம் ஆண்டு லீப் தினத்தில்தான் தொடங்கினார்.

* கிரீஸ் நாட்டில் பிப்ரவரி 29-ல் திருமணம் செய்வது அமங்கலம் என்ற எண்ணம் உள்ளது. அப்படி திருமணம் செய்பவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்காது என்றும், எளிதில் விவாகரத்து செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஐந்தில் ஒருவர் லீப் ஆண்டில் திருமணம் செய்வதை தவிர்த்துவிடுகிறார்களாம்.

* ஸ்காட்லாந்து இளவரசி மார்க்கெரெட், 1288-ல் பிப்ரவரி 29-ல் பெண்களின் காதலை அறிவிக்கும் ஆணை ஒன்றை பிறப்பித்தார். அந்த நாளில் பெண்கள் வெளிப்படுத்தும் காதலை நிராகரித்தால் ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு ‘லீப் இயர்’ என்ற திரைப்படமும் 2010-ல் எடுக்கப்பட்டுள்ளது.

* ‘ஹானர் சொசைட்டி ஆப் லீப் இயர் பேபிஸ்’ என்ற கிளப் ஒன்று செயல்படுகிறது. பிப்ரவரி 29-ந் தேதியில் பிறந்தவர்கள் மட்டும் இந்த கிளப்பில் உறுப்பினராக சேரலாம். உலகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கிளப்பில் உறுப்பினராக உள்ளனர்.

* லீப் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பல உள்ளன. லிட்டில் பிர்காம் போர் 1876-ல் நடந்தது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய 1912 ஒரு லீப் ஆண்டாகும். பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் மின்சார சக்தி கொண்டது நிரூபித்த ஆண்டு (1752) லீப் ஆண்டாகும். 

Next Story