விஸ்கி வில்லேஜ்
உலகில் வேறு எங்கும் கிடைக்காத விஸ்கி வகைகள், தாய்லாந்து நாட்டில் இருக்கும் ‘லாவோஸ்’ கிராமத்தில் கிடைக்கின்றன.
தாய்லாந்து நாட்டில் இருக்கும் ‘லாவோஸ்’ கிராமம், விஸ்கி கிராமமாக அறியப்படுகிறது. ஏனெனில் உலகில் வேறு எங்கும் கிடைக்காத விஸ்கி வகைகள், இங்கு தான் கிடைக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் விஸ்கி பானங்களில் அச்சுறுத்தலான உயிரினங்கள் மிதக்கின்றன. அப்படி மிதந்தால் தான், அது லாவோஸ் கிராமத்தில் தயாரான விஸ்கி பானமாம்.
பாரம்பரிய சமையலுக்கு பிரபலமான தாய்லாந்தில், விஸ்கி பானத்தையும் பாரம்பரியத்துடனே தயாரிக்கிறார்கள். அதற்காகவே தாய்லாந்தில் பிரத்யேகமான சிவப்பு அரிசி விளைவிக்கப்படுகிறது. அதைக் கொண்டு விஸ்கி தயாரிக்கும் லாவோஸ் கிராம மக்கள், விஸ்கி நிரப்பப்படும் பாட்டில்களில் விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை மிதக்க விடுகிறார்கள். அதனால் விஸ்கி பாட்டில்களில் பாம்பு, காட்டுத்தேள், விஷத் தவளை, பல்லி வகைகள் என விதவிதமான உயிரினங்கள் மிதக்கின்றன. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அச்சுறுத்தலாக தெரிந்தாலும், இத்தகைய விஸ்கி பானங்களை சுவைப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள், லாவோஸ் கிராமத்திற்கு வருகை தருகிறார்கள். இத்தகைய விஸ்கி வகைகளை விரும்பி சுவைப்பதுடன், பலர் வித்தியாசமான விஸ்கி பாட்டில்களை வாங்கியும் செல்கிறார்கள். பாரம்பரிய முறைப்படி சுத்தம் செய்யப்பட்ட உயிரினங்களே விஸ்கி பாட்டில் களில் மிதப்பதால், நம்பி சுவைக்கலாமாம்.
Related Tags :
Next Story