முத்தமிழ் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு அரசு விருதுகள் தகுதியானவர்கள் 10–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தமிழ் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தமிழ் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை பெற தகுதியானவர்கள் வருகிற மார்ச் 10–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
கலைஞர்களுக்கு விருதுகள்
தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றங்கள் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002–2003–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது.
2017–2018–ம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றத்தின் மூலம், மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க, எனது(கலெக்டர்) தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
முத்தமிழ் கலைகள்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், அரசன்– அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக் கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயது மற்றும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படும்.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும் 5 சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை உள்ளிட்டவை வழங்கப்படும். மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு பரிசீலனை செய்யப்படமாட்டார்கள்.
விண்ணப்பிக்க கடைசிதேதி
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று, தொலைபேசி எண் மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு அலுவலர் குடியிருப்பு, நெல்லை என்ற முகவரிக்கு வருகிற 10.3.2018–க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மெலும் தகவலுக்கு 0462–2553890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story