நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2018 2:30 AM IST (Updated: 22 Feb 2018 5:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பான சமூகநீதி பாதுகாப்பு பேரவை சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட அமைப்பாளர் சாந்தி, திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் செல்வராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்


இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார், மாநகர செயலாளர் மணிமொழியன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன், நகர துணை செயலாளர் பெரியார்தாசன், திராவிட இயக்க தமிழர் பேரவை கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

Next Story