தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் விவரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், கொண்டாடப்பட உள்ள மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி விவரங்களை கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 1–ந்தேதி முதல், மார்ச் 17–ந்தேதி வரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் நடத்தப்பட உள்ளன.
மார்ச் 1–ந்தேதி மதியம் 12 மணிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் மதியம் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு, மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.
2–ந்தேதி காலை 10 மணிக்கு மீளவிட்டான் விளையாட்டு மைதானத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு தெர்மல்நகர் குடியிருப்பு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 3–ந்தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி பிரையண்ட் நகரில் தெருமுனை பிரசாரம் நடக்கிறது. 4–ந்தேதி மதியம் 12 மணிக்கு எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாட்டுவண்டி பந்தயம்
9 மற்றும் 10–ந்தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விளாத்திகுளத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கபடி போட்டி நடத்தப்படுகிறது. 11–ந்தேதி காலை 6 மணிக்கு விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்படுகிறது. 16–ந்தேதி மாலை 6 மணிக்கு கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. 17–ந்தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story