தட்டார்மடத்தில் விவசாயிகள்–பொதுமக்கள் உண்ணாவிரதம் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
பயிர்களை காக்க குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி நேற்று விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தட்டார்மடம்,
தட்டார்மடம் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு கருகி வரும் பயிர்களை காக்க குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி நேற்று விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மணிமுத்தாறு அணை தண்ணீர்
சாத்தான்குளம் தாலுகா தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து சடையனேரி கால்வாய் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீரை கொண்டு, இந்த குளத்தை நம்பி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் வாழை, நெல், பயறு வகை பயிர்கள் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளன.
தற்போது தண்ணீர் இல்லாமல் இந்த 2 குளங்களும் வறண்டு விட்டன. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள வாழை, நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகி வருகின்றன. இதனால், பயிர்களை காக்க இந்த குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தினர். ஆனால், அந்த கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உண்ணாவிரதம்
இதனால், கருகி வரும் வாழை, நெல் பயிர்களை காக்க மணிமுத்தாறு அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, சாத்தான்குளம் தாலுகா விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் சார்பில், தட்டார்மடம் மெயின் பஜார் காமராஜர் திடலில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தேவதிரவியம் தலைமை தாங்கினார்.
தச்சமொழி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜசிங் ஆசீர், ஒருங்கிணைப்பாளர் மகா பால்துரை, வர்த்தக சங்க தலைவர் துரைராஜ், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதாகர் வரவேற்று பேசினார்.
டாக்டர் ஆசீர்வாதம் மனோகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். திருச்செந்தூர் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சத்தியசீலன், நகை தொழிலாளர் சங்க தலைவர் சுடலையாண்டி, தொழில் அதிபர்கள் காமராஜ், முருகேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story