பிரதமர் மோடியை சந்திக்க முடிவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.#AllPartyMeet #CauveryIssue
சென்னை,
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 16-ந் தேதி தனது தீர்ப்பை கூறியது.
நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி யில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. வழங்கு மாறு தனது தீர்ப்பில் கூறி உள்ளது.
காவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு குறைக்கப்பட்டு இருப்பது, தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றி ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசு நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருந்தது.
இதில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 30 அரசியல் கட்சிகளுக்கும், 9 அரசியல் அமைப்புகளும், 14 விவசாய சங்கங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தலைவர்களை அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோர், கட்டிடத்தின் தரை தளத்தில் நின்றபடி கைகூப்பி வரவேற்றனர்.
கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசுகையில், காவிரி வழக்கு தொடர்பான விவரங்களை விரிவாக குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
பல்வேறு கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் காவிரி நதிநீர் போன்ற முக்கியமான பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.
6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பின் சாதக பாதகங்கள் குறித்து தங்களின் மேலான ஆக்கபூர்வமான கருத்துகளை சுருக்கமாக தெரிவிக்க வேண்டும். தாங்கள் கூறும் ஆக்கபூர்வமான கருத்துகளை சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.ஸ்டாலின்
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்து பேசினார்கள்.
இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானம் வருமாறு:-
தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டி வலியுறுத்தப்படும்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டி.எம்.சி. அடி நீரை குறைத்தும், கர்நாடகத்துக்கு கூடுதலாகவும் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறித்து, அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் உள்ள தமிழ்நாட்டுக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு வந்தவர்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.
முன்னதாக வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்துக்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Tags :
Next Story