நிலமோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருவள்ளூர் அருகே நிலமோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் 6-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் அப்துல்ரசாக் சாய்பு (வயது 71). இவர் நிலம் வாங்க வேண்டும் என தனது நண்பர்கள் மற்றும் தரகர்களிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூரை சேர்ந்த சுப்பிரமணி, தேர்வாயை சேர்ந்த சுப்பிரமணி என்கிற சுப்பராயன் (60), எளாவூர் மெதிப்பாளையம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்கிற ராமமூர்த்தி (47), கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுலாபுரம் மண்ணடி தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்கிற கணேசமுதலியார் (68), கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரை சேர்ந்த ரகு (55) ஆகியோர் அப்துல்ரசாக் சாய்புவை தொடர்புகொண்டு தங்களிடம் சுமார் 250 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது என கூறியுள்ளனர்.
ஒரு ஏக்கர் ரூ.10 லட்சம் என பேசிய அவர்கள் தங்களுக்கு உரிமை இல்லாத நிலத்தை காண்பித்துள்ளனர். மேலும் அவர்கள் கடந்த 28-4-2012 அன்று போலியான பெயர்களில் கையெழுத்து போட்டு அவர்களிடம் கிரைய ஒப்பந்த பத்திரத்தை கொடுத்து ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்றுள்ளனர்.
அவர்கள் நிலமோசடியில் ஈடுபட்டது குறித்து அறிந்த அப்துல்ரசாக் சாய்பு மேற்கண்ட 5 பேரையும் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் சரியான பதில் எதுவும் சொல்லாமல் நிலத்தை தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனர். இதனால் ஏமாற்றப்பட்ட அப்துல்ரசாக் சாய்பு கடந்த 2015-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் கொண்டமாநல்லூரை சேர்ந்த சுப்பிரமணி இறந்துபோனார். மீதமுள்ள 4 பேர் தலைமறைவாக இருந்தனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, அனுமந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணி என்கிற சுப்பராயன், கணேசன் என்ற ராமமூர்த்தி, ராமமூர்த்தி என்கிற கணேசமுதலியார், ரகு ஆகியோரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story