வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் அடித்துக்கொலை


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2018 4:00 AM IST (Updated: 23 Feb 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காந்தலூர் பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். பாலுவும் மனைவியுடன் ஆஸ்பத்திரியில் இருந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் மர்மநபர்கள் 2 பேர் பாலுவின் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து திருட முயன்றனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து வீடு புகுந்து திருட முயன்ற நபரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த கொலை குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story