நீலகிரி மாவட்டத்தில் சோதனை நடத்த 6 தனிக்குழுக்கள் அமைப்பு
பள்ளிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த நீலகிரி மாவட்டத்தில் 6 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே பெட்டிக்கடைகள், தேநீர் கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, காலாவதியான சிப்ஸ், பிஸ்கட்டுகள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உள்ளனவா? என்பது குறித்து சோதனை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி தலைமையில் துணை கலெக்டர் முருகன், ஊட்டி உணவு வினியோக அதிகாரி மகேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சுந்தர் மற்றும் அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட் அருகே உள்ள அரசு பள்ளி, வண்டிச்சோலை, மேரீஸ்ஹில், எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட், கலெக்டர் அலுவலக சந்திப்பு, லோயர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் என மொத்தம் 15 பள்ளிகள் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த 15 பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை செய்தனர். கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் கேண்டீன்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, பாதுகாப்புக்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குண்டன் உடனிருந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்தந்த வட்ட உணவு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து பள்ளி அருகே செயல்படும் கடைகள், பள்ளி வளாகத்தில் இயங்கும் தேநீர் கடைகள், கேண்டீன்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த 6 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஊட்டியில் நடந்த சோதனையில் கடைகளில் இருந்து குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கிடைக்கவில்லை.
ஒரு சில பகுதிகளில் பள்ளி அருகே செயல்பட்ட பெட்டிக்கடைகளில் இருந்து காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஊட்டி நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் சோதனை நடத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Tags :
Next Story