குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
குஜிலியம்பாறை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.
குஜிலியம்பாறை,
கரூர் மாவட்டம் கட்டளையில், காவிரி ஆற்றில் ராட்சத நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை ஆகிய நீர் உந்து நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து ஒரு குழாய் மூலம் வேடசந்தூர் பேரூராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்றொரு குழாய் மூலம், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நத்தம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில், பாளையம்-கரூர் சாலையில் அரவக்குறிச்சி பிரிவு அருகே உடைப்பு ஏற்பட்டது.
கடந்த ஒரு மாதமாக, குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மேலும் அருகே உள்ள பாலத்தின் வழியாக செல்லும் தண்ணீர் வறட்டாற்று ஓடைக்கு செல்கிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதம் உருண்டோடி விட்ட நிலையில் அதனை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குழாய் உடைப்பை சீரமைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு ஆகும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர், நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல் வெள்ளப்பாறை அருகே தண்ணீர்பந்தம்பட்டி பிரிவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், குடிநீர் உடைப்பினை சரி செய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story