பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம்
கடலூர் துறைமுகத்தை ரூ.135 கோடி செலவில் புனரமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகரில் துறைமுகம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கப்பல் மூலம் வணிகம் நடைபெற்று மிகவும் பிரசித்தி பெற்று வந்த இந்த துறைமுகம் கடந்த சில ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் 56.92 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள பரவனாற்றை 10 மீட்டர் ஆழப்படுத்தி, அங்கிருந்து எடுக்கப்படும் மணலை துறைமுக கட்டுமான பணிகளுக்கும், கடல் அரிப்பை தடுக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. 2 கப்பல் தளங்கள் அமைத்து ஆண்டு ஒன்றுக்கு 5.68 மில்லியன் மெட்ரிக் டன் வரை சரக்குகளை கையாள முடியும். விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள், நிலக்கரி, சிமெண்டு, மரங்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 2 ஆயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கிடையே இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் துறைமுகத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ராமசுப்பு வரவேற்றார்.
அண்ணாமலை பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை இயக்குனர் நேருகுமார் துறைமுகத்தை புனரமைக்கும் திட்டம் குறித்து அகன்ற வீடியோ திரையின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
நிஜாமுதீன்(நுகர்வோர் கூட்டமைப்பு):- இந்த திட்டம் மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் அமைய கூடாது. ஏற்கனவே மீனவர்கள் முகத்துவாரத்தில் மணல் மூடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இனி இதுபோன்ற விபத்து ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஆய்வு குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. இது போதாது 3 பருவநிலைகளையும் கருத்தில் கொண்டு ஆண்டு முழுவதும் ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை தயார் செய்ய வேண்டும், 10 கி.மீ. தொலைவில் கடற்கரையில் ஆமைகள் முட்டையிட வருகின்றன. டால்பின் மீன்களும் கரையோரம் செல்கின்றன. எனவே எந்த மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன்பிடி தொழிலும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருதவாணன்(குடியிருப்போர்நலச்சங்கம்):- சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பில் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பச்சையாங்குப்பம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். துறைமுகத்தை ஆழப்படுத்தும்போது எடுக்கப்படும் மணலை பாதுகாப்புடன் கையாள வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனி உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், ஏற்கனவே இருந்தது போல துறைமுகத்துக்கு ரெயில்பாதை அமைக்க வேண்டும்.
கஜேந்திரன்(தமிழ்நாடு மீனவர்பேரவை):- துறைமுகத்துக்குகள் கப்பல் வரும்போது மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். முகத்துவார பகுதியில் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் தனி வழி அமைத்து மிதவை விளக்குகளை அமைக்க வேண்டும். கரையோர கிராமங்களுக்குள் கடல் நீர் புகாமல் இருக்க கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இதற்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி பதில் அளித்த பேசியதாவது:-
அரசு மற்றும் பொதுமக்கள் முயற்சியின் காரணமாக பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்த துறைமுகம் ரூ.135 கோடியில் புனரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இருப்பினும் தங்களின் வாழ்வாதரமும், மீன்வளமும் பாதிக்கப்படக்கூடாது, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற 3 முக்கிய கோரிக்கைகளை மீனவர்கள் வைத்துள்ளார்கள். உங்கள் ஒவ்வொரு கோரிக்கையும் அதற்குரிய துறைகளின் மூலம் விரிவான பதில்கள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராம கூட்டமைப்பை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக் கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் சென்னை துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன், கடலூர் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு கடல்சார் வாரிய செயற்பொறியாளர் ரவிபிரகாஷ், கடலூர் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், கடலூர் துறைமுக அதிகாரி(பொறுப்பு) ஜெபசிங் மற்றும் பல்வேறு மீனவர் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story