பொய்யான தகவல்களை கூறி கவர்னர் அரசியல் செய்கிறார்
கவர்னர் கிரண்பெடி பொய்யான தகவல்களை கூறி அரசியல் செய்கிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்னாள் சேர்மனும், உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான எம்.என்.ஆர்.பாலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் 7 எம்.எல்.ஏ.க்கள் தலைவர்களாக இருந்த வாரியங்களில் தவறு நடந்துள்ளதாக தகவல்கள் பரப்புகின்றனர். இந்த புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அதிகாரமற்ற சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பதவியை ஏற்க மறுத்து 7-12-2017 அன்று கவர்னருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன். தற்போது நான் அந்த வாரியத்தின் தலைவர் அல்ல.
துறை செயலாளரின் தலைமையின்கீழ்தான் வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-7-2016 முதல் 13-7-2017 வரை அந்த வாரியத்தின் தலைவராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் ரூ.12 லட்சம் செலவழித்ததாக கூறப்பட்டது. அப்போது நான் ஒரு ரூபாய்கூட சம்பளம் பெறவில்லை. வாரிய தலைவர்களின் அதிகாரத்துக்குட்பட்டு 5 ஊழியர்கள் நியமனத்துக்கும் ஊழியர்களின் பெயர்களுடன் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர்களுக்கு சம்பளமாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
காருக்கு டீசல் போட மாதம் ரூ.8 ஆயிரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அந்த காரில் நான் மட்டுமே செல்லவில்லை. காரைக்கால், சீகல்ஸ், படகுகுழாம் போன்றவற்றிற்கு அதிகாரிகளையும் அழைத்துச் சென்றுள்ளேன். அப்படிப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3½ லிட்டர் டீசல்தான் செலவிடப்பட்டுள்ளது.
வாரிய தலைவரான எனக்கு தனியாக போன் எதுவும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே அலுவலகத்தில் உள்ள போனில்தான் நான் பேசிவந்தேன். வாரியத்தில் ஏதாவது தவறு நடந்திருந்தால் முதலில் சம்பந்தப்பட்டவர்களைத்தான் கவர்னர் கேட்டிருக்கவேண்டும். அதைவிடுத்து சமூக வலைதளத்தில் தவறான பதிவுகளை போடக்கூடாது. பொய்யான தகவல்களை கூறி கவர்னர் அரசியலாக்கி வருகிறார்.
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நான்தான் முதலில் கவர்னரிடம் அறிக்கை கொடுத்தேன். அதை வைத்துதான் கவர்னர் சில நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவராக இருந்து நான் எந்த ஆதாயமும் அடையவில்லை. வாரியங் களுக்கு தலைவர்கள் தேவையில்லை என்று கூறுகின்றனர்.
விவசாய கடன் தள்ளுபடி, வாரிய தலைவர்கள் நியமனம் போன்ற பிரச்சினைகளில் முடிவு எடுக்க மத்திய அரசுக்குதான் கோப்புகளை கவர்னர் கிரண்பெடி அனுப்பினார். அப்படி இருக்க கவர்னர் பதவி எதற்கு? செலவை குறைக்கும் வகையில் கவர்னர், பதவி விலகுவாரா? இப்படியே போனால் பிரதமர் பதவிகூட தேவைப்படாது. ஜனாதிபதியே நிர்வாகத்தை கவனித்துக்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story