கடலுக்கு அடியில் மின்கேபிள் பதிக்கப்பட்டு எலிபெண்டா குகை கிராமங்களுக்கு மின்சார வசதி
கடலுக்கு அடியில் மின்கேபிள் பதிக்கப்பட்டு எலிபெண்டா குகை கிராமங்களுக்கு மின்சார வசதி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
மும்பை,
மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’வில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் உலக புகழ்பெற்ற எலிபெண்டா குகை அமைந்துள்ளது. எலிபெண்டா தீவுப்பகுதியில் 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 1,000 பேர் வசித்து வருகின்றனர். எலிபெண்டா குகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லாமல் இருந்தது. அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மண்எண்ணை விளக்குகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஓட்டல்கள் மற்றும் ஒரு சில வீடுகளில் மட்டும் ஜெனரேட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 15 மாதங்களுக்கு முன் எலிபெண்டா குகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சார இணைப்பு கொடுப்பதற்கான பணியை மாநில மின் நிறுவனம் தொடங்கியது. சமீபத்தில் இந்த பணிகள் முடிவடைந்தது.
எலிபெண்டா குகை மற்றும் அதன் அருகே உள்ள கிராமங்களுக்கு மின்சார சேவையை தொடங்கி வைப்பதற்காக விழா நேற்று நடந்தது. முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் சமூக ஆர்வலர் அப்பாசாகிப் தர்மாதிகாரி சுவிட்சை ஆன் செய்து எலிபெண்டா குகை கிராமங்களுக்கான மின்சேவையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மந்திரிகள் சந்திரசேகர் பவன்குலே, ஜெயகுமார் ராவல், ரவீந்திரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மின்சார சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து மாநில மின்நிறுவன மண்டல இயக்குனர் சதீஸ் காராப்பே கூறும்போது:-
நாட்டிலேயே இந்த திட்டத்திற்கு தான் நீண்ட தூரத்திற்கு கடலுக்கு அடியில் மின்கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 மாதம் நடந்தது. 3 கிராமங்களில் தலா ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து உள்ளோம். 13 அடி உயரத்தில் 6 தெரு விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது. 200 வீடுகள் மற்றும் சில வணிக கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story