ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் விடக்கோரி தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் விடாமல் மறித்து போராட்டம், 20 பேர் கைது
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் விடக்கோரி தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் விடாமல் மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது லாரிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆழியாற்றில் திறக்கப்படும், தண்ணீர் மணக்கடவு என்ற இடத்தில் கேரளாவுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதுவரைக்கும் 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. மழை இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்க மே மாதம் வரை காலஅவகாசம் உள்ளது.
இதற்கிடையில் தற்போது ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக எல்லைப்பகுதியான பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம், கோபாலபுரம் பகுதிகளில் உள்ள கேரள கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கவும் கோரி கேரளாவை சேர்ந்த ஜனதா தளம் கட்சியின் சித்தூர் தொகுதி கிருஷ்ணன் குட்டி எம்.எல்.ஏ, சித்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி தலைவர்களை அழைத்து பேசி போராட்டம் நடத்துவது குறித்து திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினார்.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் பொள்ளாச்சியையொட்டிய கேரள எல்லையில் திரண்ட கேரளாவை சேர்ந்த ஜனதா தளம் உள்ளிட்ட சில அரசியல் கட்சியினர் மற்றும் அங்குள்ள விவசாயிகள் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். இதுகுறித்து கேரள போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, வடக்காடு, செமனாம்பதி, ஜமீன்காளியாபுரம், நெடும்பாறை உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் தமிழக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் உள்ளூர் போலீசாருடன், ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறி, பால், கறிக்கோழி, முட்டை உள்பட அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில் கேரள மாநிலம் வண்ணாமடை, அத்திக்கோடு ஆகிய இடங்களில் 5 தமிழக லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலக்காடு ரோட்டில் சென்ற வாகனங்கள் நல்லூர் சோதனை சாவடியிலும், மீன்கரை ரோட்டில் சென்ற வாகனங்கள் ஜமீன் ஊத்துக்குளி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன. நடுப்புணி வழியாக செல்லும் வாகனங்களை வடக்கிபாளையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் மீனாட்சிபுரத்தில் நேற்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர், ம.தி.மு.க.வினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் குவிந்தனர். தமிழக வாகனங்களை அவர்கள் தடுத்து நிறுத்துவதால் கேரளா வாகனங்கள் தமிழகத்திற்கு வர வேண்டாம். இங்கிருந்தும் கேரளாவுக்கு செல்ல விட மாட்டோம் என்று கோஷம் எழுப்பியப்படி வாகனங்களை மறித்தனர். இதனால் கேரள அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு, பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து பொள்ளாச்சி போலீஸ் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
அதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த லாரிகளை போலீசார் வாளையாறு சோதனை சாவடி வழியாக செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். பின்னர் லாரிகள் ஒவ்வொன்றாக அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தமிழக போலீசார் கேரள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று கேரளா போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலம் மீனாட்சிபுரம், கன்னிமாரா, நெல்லிமேடு ஆகிய பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்த போராட்டங்காரர்கள் நின்றுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதற்கிடையில் பொள்ளாச்சி அருகே நல்லூர் சோதனை சாவடியில் கேரளா சென்ற லாரிகளை போலீசார் தடுத்துநிறுத்தினார்கள்.லாரிகளில் கல்வீசுவதாக கூறி பாதுகாப்பு கருதி லாரிகளை நிறுத்த கூறினார்கள்.இதை டிரைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உடனே போலீசார் நிலவரத்தை எடுத்து கூறி அவர்களை சமாதான படுத்தினார்கள்.

Related Tags :
Next Story