நெசவாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்
கரூர் மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
உப்பிடமங்கலம்,
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் மாரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரூ.50 ஆயிரத்தில் கைத்தறி உபகரணங்கள் மற்றும் 25 நெசவாளர்களுக்கு முத்திரா கடனுதவிகள் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் கைத்தறி தொழில் பாரம்பரியமிக்க தொழிலாகும். கரூரில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழிலை 25 ஆயிரம் நெசவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நெசவாளர்கள் மற்றும் நெசவுத்தொழில் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 2017-2018-ம் நிதியாண்டில் 565 நெசவாளர்களுக்கு ரூ.28 கோடியே 25 லட்சத்தில் முத்திரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று(நேற்று) மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 25 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் முத்திரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்று கைத்தறி பெருங்குழுமம் திட்டத்தின் கீழ் 573 நெசவாளர்களுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெசவாளர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தொழிலாளர் மேம்பாடு அடைந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 55 கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்க வேண்டும். ஆரம்பத்தில், உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட நெசவுத்தொழில் தற்போது உலக நாடுகளில் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சி பெற தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 25 ஆயிரம் நெசவாளர்களை கொண்டு நெசவுத்தொழில்உயரும், கரூர் மாவட்டத்தில் அனைத்து நெசவாளர்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, கோவை தேசிய கைத்தறி வளர்ச்சி கழக துணை மேலாளர் கந்தசாமி, கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் வெற்றிச்செல்வன், மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் காளியப்பன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், திருவிக, உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், தாசில்தார் அருள், மாரியம்மன் நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story