தீயணைப்பு படை வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க தாமதம் 4 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் கோர்ட்டு உத்தரவுப்படி 4 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரியை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் சுதாகர்(வயது 40). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இழப்பீடு கோரி அவருடைய மனைவி லீலாவதி மற்றும் குடும்பத்தினர் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரூ.51 லட்சத்து 62 ஆயிரத்து 605 தொகையை இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வழக்குதாரர் தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி 6 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் செலுத்துவதாக அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் 4 பஸ்கள் விடுவிக்கப்பட்டன. அதன்பின் இழப்பீட்டு தொகையை வழங்குவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி ரவி விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் 4 அரசு பஸ்களை மீண்டும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், வழக்குதாரரின் வக்கீல்கள் கபிலன், முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி பஸ்நிலையத்தில் இருந்து அரூருக்கு புறப்பட தயாராக நின்ற 2 பஸ்கள், ஓசூர் மற்றும் பெங்களூருவிற்கு புறப்பட தயாராக நின்ற 2 பஸ்கள் என மொத்தம் 4 அரசு பஸ்களை நேற்று ஜப்தி செய்தனர்.

Related Tags :
Next Story