அரவிந்தர் ஆசிரமத்தை பிரதமர் பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வோம், ஹேமலதா எச்சரிக்கை
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை பிரதமர் பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்
புதுச்சேரி,
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ, அருணஸ்ரீ, ராஜ்யஸ்ரீ , நிவேதிதா ஆகியோர் தங்கி இருந்தனர். அவர்கள் ஆசிரம நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த நிர்வாகம் அவர்களை ஆசிரமத்தில் இருந்து வெளியேறும் படி உத்தரவிட்டது.
இந்தநிலையில் கடந்த 17-12-2014 அன்று அதிகாலை சகோதரிகள் ஹேமலதா, அருணாஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ராஜ்யஸ்ரீ தங்களின் பெற்றோர் பிரசாத், சாந்திதேவி ஆகியோர் குடும்பத்துடன் காலாப்பட்டுக்கு சென்று அங்கு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
இதில் அருணஸ்ரீ (52), ராஜ்யஸ்ரீ (48), தாயார் சாந்திதேவி (78) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ, தந்தை பிரசாத் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர்.
அவர்கள் தற்போது புதுவையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது தாய் மற்றும் 2 சகோதரிகள் இறப்புக்கு காரணமான அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தின் மீது போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யாததை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை ஆசிரம நிர்வாகம் வழங்காததை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்தநிலையில் ஹேமலதா கூறுகையில், “இதுவரை அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட உள்ளார். இதை எதிர்க்கிறோம். பல்வேறு புகார்கள் ஆசிரம நிர்வாகிகள் மீது உள்ள நிலையில் பிரதமர் அங்கு வந்து பார்வையிட்டால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. பிரதமர் ஆசிரமம் வரக்கூடாது. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பிரதமர் வந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.

Related Tags :
Next Story